அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகளால் ஆன மாலை செலுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும். வழக்கம் போல இந்த ஆண்டும் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை சாத்தப்பட்டது . காலை 11 மணி வரை மட்டுமே இந்த வடை மாலை சாத்தப்பட்டு இருக்கும். அதன் பின்னர் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.