Categories
தேசிய செய்திகள்

நமக்கு சோறு தான் முக்கியம்!… 1 நிமிடத்தில் இத்தனை ஆர்டரா?… இந்தியாவில் டாப்ல இருக்கும் பிரியாணி….!!!!!

இந்தியா முழுவதும் நடப்பு ஆண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலை ஸ்விகி நிறுவனமானது வெளியிட்டு உள்ளது. அந்த வகையில்  நடப்பு ஆண்டில் இந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்படும் உணவாக பிரியாணி இருக்கிறது. அதன்படி ஒரு நிமிடத்துக்கு 137 பிரியாணி (ஒரு நொடிக்கு 2.25 பிரியாணி) நாடு முழுவதும் ஆர்டர் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முதலிடத்தில் சிக்கன் பிரியாணி இருக்கிறது.

அத்துடன் மசால் தோசை, சிக்கன் ப்ரைடுரைஸ் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறது. மேலும் வெளிநாட்டு உணவிலும் இந்தியர்கள் அதிகம் நாட்டம் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியன் ரவியோலி, கொரியன் பிபிம்பாப் போன்றவற்றின் மீதான ஈர்ப்பு அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின் ஸ்விகி இன்ஸ்டாஸ்மார்ட் சேவையின் வாயிலாக டீ, ரொட்டி வகைகள் அதிகளவு ஆர்டர் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |