எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடைபெற இருந்த நடிகர் SV சேகரின் நாடகம் மாற்றப்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் , விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினரின் பதவி காலம் முடிவடைந்த நிலையில் 2019-2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் 23_ ஆம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே நாளில் நடிகர் SV சேகர் அல்வா என்ற நாடகத்தை அதே கல்லூரியில் நடத்த அனுமதி பெற்றிருந்தார்.
மேலும் இதே இடத்தில் அதே நாளில் நடிகர் சங்க தேர்தலும் நடைபெறுமென்று அறிவிக்கப் பட்டதால் தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தல் நடத்த தடை விதிக்கப்படடதோடு தற்போது மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தேர்தல் நடைபெற வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது SV சேகரின் நாடகம் காமெடி தர்பார் என்ற பெயரில் தியாகராஜர் அரங்கில் நடைபெற இருக்கின்றது.