பிரித்தானிய பிரதமரின் மனைவி கேரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களது குழந்தையின் பெயரை அறிவித்துள்ளார்
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கேரி தம்பதியினர் தங்களது குழந்தையின் பெயரை முதன்முதலாக அறிவித்துள்ளனர். குழந்தையின் பெயர் Wilfred Lawrie Nicholas Johnson என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்த கேரி அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.
Wilfred மற்றும் Lawrie தங்கள் இருவரின் தாத்தாக்கள் பெயர் என்றும் பிரதமர் ஜான்சனை கொரோனா தொற்றிலிருந்து தீவிர சிகிச்சை கொடுத்து காப்பாற்றிய Nick Price மற்றும் Nick Hart என்ற இரண்டு மருத்துவர்களின் நினைவாக தங்கள் மகனின் பெயரில் Nicholas சேர்த்து இருப்பதாகவும் கேரி குறிப்பிட்டுள்ளார். அதோடு மகப்பேறுக்கு உதவி செய்த அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துள்ளார் கேரி.