மத்திய பிரதேச மாநிலத்தில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்தி வந்ததாக உரிமையாளர் மற்றும் பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் இளைஞர் ஒருவர் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். அந்த மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குவாலியர் காவல்துறையின் குற்றப்பிரிவு போலீசார், அந்த சென்டரில் சோதனை நடத்தியதில் அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்டரின் உரிமையாளர் மற்றும் அங்கு இருந்த பணியாளர்கள் 5 பேரை அவர்கள் கைது செய்தனர். மேலும் அங்கு இருந்த பெண்களை மீட்டு காவல்துறையினர் அருகில் உள்ள மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.