Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“பெயர்தான் சின்ன வெங்காயம்… ஆனா பெரிய நோய்களைக் கூட குணப்படுத்தும்”…. கட்டாயம் சாப்பிடுங்க…!!

அதிகமாக விட்டமின்களையும், தாதுஉப்புகளையும் கொண்டு மருத்துவ பொக்கிஷமாக திகழும் சின்ன வெங்காயத்தின் மருத்துவ  பயன்கள்

சின்ன வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுப்படுத்தும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் தினமும் சின்னவெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வருவது நல்லது.

வெங்காயத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்களின்  வளர்ச்சியை அதிகரித்து செரிமானம் மலச்சிக்கல்,சிறுநீர் கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

மூல நோய் உள்ளவர்கள் வெங்காயச் சாற்றோடு சிறிது சர்க்கரை கலந்து குடித்தால் மூலநோய் குணமாகும்.

வெங்காய சாற்றை தண்ணீரில் கலந்து பருகினால் சிறுநீர் கடுப்பு எரிச்சல் நீங்கும்.

ஜலதோஷம் நெஞ்சு படப்படப்பு இருந்தால் ஒரு சின்ன வெங்காயத்தை மென்று சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் போதும் தும்மலும்,ஜலதோஷமும் நீங்கிவிடும்.

நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

இரவில் தூங்கும் முன்பு சின்ன வெங்காயத்தை வதக்கி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண் மலட்டுத்தன்மை நீங்கும்.

சின்ன வெங்காயம் கொழுப்பை உடனே கரைக்கும் தன்மை உடையதால் மாரடைப்பு நோய், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் தினமும் சாப்பிடுவது நல்லது.இதனால் இரத்தம் உறைவது தடுக்கப்பட்டு  ரத்த ஒட்டத்திற்கு வழிவகை செய்கிறது.

 

சின்ன வெங்காயத்தில் உள்ள பைரிடாக்சின் உடலில் உள்ள ஹார்மோன்கள் அளவை சரியான அளவில் வைக்கவும், மன அழுத்தத்தை குறைப்பதால் டென்ஷன் இல்லாமல் நிம்மதியாக இருக்க முடியும்.

யூரிக் அமிலம் அதிகமாகி  சிறுநீர்ப் பையில் சேர்வதால் ஏற்படும் கற்களை கரைக்க தினமும் சின்னவெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் கல் கரைந்துவிடும்.

வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலிக்கு வெங்காயச் சாற்றுடன் கடுகு எண்ணெய் கலந்து தடவினால் வலி நீங்கும்.

தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.இதனால் நுரையீரலில் உள்ள நோய் தொற்று நீங்கி சுவாசம் தடையின்றி நடைபெறும்.

வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் டிபி நோய் குணமாகும்.

தினமும் சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்.

முகப்பரு உள்ளவர்கள் நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

Categories

Tech |