உலகளவில் கொரோனாவால் 59,203 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,17,860ஆக உயர்ந்துள்ளது. உலகில் உள்ள 200 நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் பாதித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் 2,902 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 68ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை 411 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பவுர்ணமியையொட்டி அண்ணாமலையார் கோயிலில் 7ம் தேதி கிரிவலம் செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் கந்தசாமி அறிவிட்டுள்ளார்.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திருவண்ணாமலையில் 7ம் தேதி கிரிவலம் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் வரும் பவுர்ணமி நாளன்று ஆயிரக்ணணக்கானோர் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .