சென்னையில் நாம ஒரு திருவிழா நடைபெறும் இடங்களை கனிமொழி எம்பி மற்றும் சந்தீப் நந்தூரி ஐஏஎஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
சென்னையில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் நம்ம ஊரு திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த விழா கனிமொழி எம்பி, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள சிவன் பூங்கா, நாகேஸ்வரராவ் பூங்கா, செம்மொழி பூங்கா ஆகிய பகுதிகளில் நம்ம ஊரு திருவிழா நடத்துவதற்கான ஆய்வை கனிமொழி எம்பிஏ மற்றும் சந்தீப் நந்தூரி ஐஏஎஸ் ஆகியோர் மேற்கொண்டனர். மேலும் சென்னையை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பிற பகுதிகளிலும் நம்ம ஒரு திருவிழா நடத்தப்படும் என்று 2022-23 ஆம் நிதியாண்டில் சட்டமன்ற பேரவையின் மானிய கோரிக்கையின் போது தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.