Categories
தேசிய செய்திகள்

நம்ம உறவை வலுப்படுத்த!… இந்தியாவுடன் இணைந்து பணிபுரிய நான் ரெடி!…. வாங் யீ சொன்ன விஷயம்…..!!!!

அருணாச்சலப்பிரதேசத்தில் சென்ற 9ம் தேதியன்று தவாங் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களை இந்திய வீரர்கள் விரட்டியடித்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வீரர்கள் காயமடைந்தனர். இதில் இந்திய வீரர்களின் தாக்குதலை அடுத்து சீனவீரர்கள் பின்வாங்கினர். சில தினங்களுக்கு பின் இந்திய-சீன எல்லையில் நிலைமை சீராக உள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் கூறியது.

இதற்கிடையில் சென்ற 20 ஆம் தேதி இந்தியா – சீனா இடையில் நடந்த 17-வது சுற்று பேச்சுவார்த்தையில் ராணுவ கமாண்டர்கள் பங்கேற்றனர். இவற்றில் மேற்கு எல்லைப் பகுதியில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிக்க வேண்டும் என்று இருதரப்பினரும் ஒப்புதல் வழங்கியதாக தெரிகிறது. அதேபோன்று எல்லைப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை வாயிலாக தீர்வுகாண இருதரப்பும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில் எல்லைப் பகுதிகளில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதில் இந்தியா மற்றும் சீனா உறுதியாக உள்ளதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சரான வாங் யீ தெரிவித்து உள்ளார். மேலும் இரண்டு நாடுகளும் ராணுவம் மற்றும் ராஜாங்க ரீதியாக தொடர்பில் உள்ளதாகவும், இருநாடுகளும் எல்லையில் அமைதி நிலவ உறுதிபூண்டு இருப்பதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி இந்தியா-சீனா உறவுகளை வலுப்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணிபுரிய தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

Categories

Tech |