Categories
கிரிக்கெட் விளையாட்டு

நான் பேட்டிங் செய்ய 3-வது வரிசைதான் சிறந்தது ….! ஸ்ரேயஸ் அய்யர் பேட்டி …!!!

இலங்கை அணிக்கெதிராக சமீபத்தில் நடந்த டி20 தொடரில் இந்தியா வெற்றி பெற்றது . மேலும் தொடர்நாயகனுக்கான விருது ஸ்ரேயாஸ் அய்யருக்கு வழங்கப்பட்டது.இதனிடையே பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில்,””என்னிடமோ , அணியின் பயிற்சியாளர்களிடமோ நான் எந்தவித எதிர்பார்ப்பையும் வைத்திருப்பதில்லை.
ஏனென்றால் அணியில் அந்த அளவுக்கு அதிகமான போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு வீரர்களும் ஆட்டத்தை வெல்லும் திறன் படைத்தவர்களாக உள்ளனர்.மேலும் எனக்கு வழங்கப்படும் ஒவ்வொரு தருணத்தையும், வாய்ப்பையும் நான் அனுபவிக்க விரும்புகிறேன்.
ஒவ்வொரு முறை களமிறங்கும் போதும் போட்டியை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதே சமயம் நான் பேட்டிங் செய்வதற்கு சிறந்த வரிசை எது என்று கேட்டால் 3-வது வரிசையையே சொல்வேன்”இவ்வாறு அவர் கூறினார்.

Categories

Tech |