இளம் ஹீரோயின் போல் ஜொலித்து வரும் 44 வயதான நடிகை ஜோதிகா ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித், விஜய், ரஜினி போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. இவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்ததற்கு பின் சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் “36 வயதினிலே” என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். இதனை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள் மற்றும் உடன் பிறப்பு போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார்.
தற்போது இவர் மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்முட்டியுடன் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். மேலும் மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஜோதிகாவின”தி கிரேட் இந்தியன் கிட்சன்” என்ற திரைப்படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கவுள்ளார். நடிகர் ஜோதிகாவின் பிறந்த நாளான நேற்று முன்தினம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இந்தத் திரைப்படத்திற்கு “காதல் – தி கோர்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது.
இந்நிலையில் ஜோதிகா கடின உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, “இந்த பிறந்தநாளுக்கு உடல் நலத்தையும் பலத்தையும் எனக்கு நான் பரிசாக தந்துக்கொள்கிறேன். வயது என்ன, என்னை மாற்றுவது, அந்த வயதை நான் மாற்றுகிறேன்!” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
https://www.instagram.com/reel/Cj4daKzrpm8/?utm_source=ig_web_button_share_sheet