Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நான் இனவெறி பிடித்தவனா “….? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த டி காக் ….!!!

இனவெறிக்கு எதிராக ஆதரவு தெரிவிக்காத சர்சையில் சிக்கிய தென் ஆப்ரிக்கா வீரர் டி காக் அடுத்த போட்டியில்  விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .  இப்போட்டியில் விளையாடும் அணிகள் இனவெறிக்கு எதிராக முழங்காலிட்டு தங்கள் ஆதரவை  தெரிவிக்க வேண்டும் என ஐசிசி தெரிவித்திருந்தது .இதற்கு அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் ஆதரவு தெரிவித்தது .இதனால் போட்டி தொடங்குவதற்கு முன்பாக இரு அணி வீரர்களும் இனவெறிக்கு எதிராக முழங்காலிட்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வந்தனர் . இதனிடையே தென்னாப்பிரிக்கா தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து மோதியது அன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியின் விக்கெட் கீப்பர்  டி காக் முழங்காலிட்டு ஆதரவு தெரிவிக்க மறுத்துவிட்டார்.இதனால் பெரும் சர்ச்சை வெடித்தது.இதன் காரணமாக அவர் வெஸ்ட் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டி தொடங்குவதற்கு முன்பாக அணியில் இருந்து விலகினார். இந்நிலையில் டி காக் அடுத்த போட்டியில் விளையாடுவர் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் முழங்காலிட்டு ஆதரவு தெரிவிக்க மறுத்ததால் இவர் மீது விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் இதுகுறித்து டி காக் விளக்கமளித்துள்ளார் . அவர் கூறுகையில்” நான் ஒரு கலப்பின குடும்பத்திலிருந்து வந்தவன் என்பதை அறியாதவர்களுக்காக என்னுடைய சக வீரர்கள் மற்றும் நாட்டு ரசிகர்களிடம் வருத்தம் சொல்வதுடன் ஆரம்பிக்க விரும்புகிறேன். எனது ஒன்று விட்ட சகோதரிகள் வெள்ளை நிறத்தை செய்தவர்கள். என்னுடைய வளர்ப்பு தாய்  கருப்பு இனத்தை சேர்ந்தவர் .என்னைப் பொருத்தவரை பிறந்ததிலிருந்து இனவெறிக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்ற விவகாரம் இருந்து வருகிறது .நம் அனைவருக்கும் உரிமைகள் உள்ளது .அவை முக்கியமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் .அதோடு அவர்களின் உரிமைக்காக இந்த வழியில்தான் செய்ய வேண்டும் என என்னிடம் சொல்லும்போது என்னுடைய உரிமை பறிக்கப்படுவதாக உணர்கிறேன்”, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |