Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எவ்வளவு துணிச்சல்…. வசமா மாட்டிய வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

வழிமறித்து சட்டை பையில் இருந்த பணத்தை எடுத்துச் சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டத்திலுள்ள அலமேலுமங்காபுரம் பகுதியில் வடிவேலன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சத்துவாச்சாரி பொன்னியம்மன் கோவில் தெருவில் சென்று கொண்டிருக்கும்போது அங்கு ரங்காபுரம் புலவர் நகரைச் சேர்ந்த யோகேஷ் என்பவர் வடிவேலனை வழிமறித்து நான் பல கொலை செய்துள்ளேன் என்றும் உன்னிடம் உள்ள பணத்தை தரவேண்டும் என்று மிரட்டி அவரது சட்டைப்பையில் இருந்த ஆயிரம் ரூபாயை எடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து வடிவேலன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து யோகேஷ் என்பவரை கைது செய்தனர்.

இதேபோன்று விருதம்பட்டு பகுதியில் சேட்டு என்பவர் காகிதப்பட்டறை எல்.ஐ.சி. காலனி பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது ஒருவர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி சட்டைப் பாக்கெட்டில் இருந்த 2,500 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து சேட்டு கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது வழிப்பறியில் ஈடுபட்ட காகிதப்பட்டறையைச் சேர்ந்த ஜனா என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Categories

Tech |