தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தி.மு.க நிர்வாகியான கோவி.அய்யாராசு என்பவரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “இந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சியாக நடந்துகொண்டிருப்பதை பார்க்கிறோம். புயலுக்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கையை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
புயலை எதிர்கொள்ளும் ஆற்றல் இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு இருக்கிறது. இதற்கிடையில் உழைப்புதான் நம் மூலதனம் என்று கருணாநிதி கூறினார். நான் நம்பர்-1 முதல்மைச்சர் என்பதில் எனக்கு பெரிய பெருமை இல்லை. என்றைக்கு தமிழகம் நம்பர்-1 மாநிலம் என்று வருகிறதோ அன்றுதான் எனக்கு பெருமை. அதை கண்டிப்பாக நிறைவேற்றுவேன். ஏனெனில் நான் சாதாரண ஸ்டாலின் இல்ல, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என்று பேசினார்.