Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நான் ஸ்பின்னராக மாறியதே ஹர்பஜன் சிங் பாத்துதான்” ….! சுவாரஸ்ய தகவல் பகிர்ந்த அஸ்வின் ….!!

நான் ஸ்பின்னர் ஆனதற்கு  காரணம் ஹர்பஜன் சிங் தான் என அஸ்வின் கூறியுள்ளார் .

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான தமிழக வீரர் அஸ்வின்  நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாம்  லாதமின் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார். இதன் மூலம் அவர் 418-வது விக்கெட்டை வீழ்த்தினார். இதுவரை 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின்  418 விக்கெட் கைப்பற்றி அசத்தியுள்ளார்.அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பவுலர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளே 619 விக்கெட் கைப்பற்றி முதலிடத்திலும் ,கபில்தேவ் 434 விக்கெட் கைப்பற்றி 2-வது இடத்திலும் உள்ளனர்.அடுத்ததாக அஸ்வின் 418 விக்கெட் கைப்பற்றி 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.இதன் மூலம்  ஹர்பஜன் சிங்கின் சாதனையை அவர் முறியடித்துள்ளார் .இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய அஸ்வினுக்கு ஹர்பஜன்சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பதிவில்,’அஸ்வினுக்கு வாழ்த்துக்கள். மேலும் அவர் பல விக்கெட்டுகளை கைப்பற்ற வாழ்த்துக்கள் சகோதரரே .கடவுள் அருள் புரியட்டும். சாதனைகள் தொடரட்டும்’ இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார் .இதனிடையே ஹர்பஜன் சிங்குக்கு நன்றி தெரிவித்து  பிசிசிஐ-க்கு  அளித்த பேட்டியில் அஸ்வின் கூறும்போது,” இது ஒரு அபாரமான சாதனை. 2001ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில்  ஹர்பஜன் சிங் அருமையாக பந்து வீசிய போது என்னால் ஆப் ஸ்பின்னர் ஆக முடியும் என நான் நினைக்கவில்லை அதோடு அவரால் ஊக்கம் கொண்ட நான்  ஆப் ஸ்பின் வீசுவதற்காகப் பந்தை எடுத்தேன். இப்போது இந்த சாதனையை செய்து உள்ளேன். என்னை ஊக்கப்படுத்தியதற்காக ஹர்பஜன் சிங்கிற்கு  நன்றி “இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |