தான் பதவி விலகப்போவதாகவந்த செய்தி போலியானது எனலெபனான் பிரதமர் ஹசன்தெரிவித்துள்ளார்.
லெபனான் பகுதியானது மிகவும் கடினமான பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் உணவு, மின்சாரம், கல்வி, சுகாதாரம், இருப்பிடம், போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமின்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசின் கடும் எதிர்ப்புகளுக்கு உள்ளானார் பிரதமர் ஹசன். லெபனான் தற்சமயம் வரலாற்றிலேயே மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடி நிலையில் உள்ளதால் மேலும் சரிவை நோக்கியே செல்கிறது. இத்தகைய சூழ்நிலையில் குடிமக்களுக்கான அடிப்படை வசதிகளை அரசு விரைவில் ஏற்படுத்த வேண்டும் என மனித உரிமை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் லெபனான் பிரதமர் பதவியில் இருந்து விலகிச் செல்வதாக தகவல் வெளியாகியது. இச்செய்தி போலியானது என்றும் தான் ஆட்சியில் இருக்கும் வரையில் லெபனான் வேறு எவருடைய கட்டுப்பாட்டிற்கு கீழும் செல்லாது என கூறியுள்ளார். அரசு பொருளாதார நெருக்கடியை சரிசெய்யும் முயற்சியில் விரைந்து செயல்பட்டு வருகிறது என ஹசன் டயட் கூறியுள்ளார். லெபனானின் நாணய மதிப்பானது டாலருக்கு நிகரான மதிப்பில் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.