Categories
சினிமா தமிழ் சினிமா

நான் திருடவில்லை…. அசிங்கமாக இருக்கு… பிக் பாஸிடம் கதறி அழுத தனலட்சுமி… வைரலாகும் புரோமோ….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் சண்டைகள், பிரச்சினைகள் மட்டுமின்றி என்டர்டெயின்மெண்டுக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் விஜே மகேஸ்வரி எலிமினேஷன் ஆகியுள்ளார். கடந்த வாரம் இனிப்பு கம்பெனியாக மாறிய பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட சண்டைகள் அரங்கேறியது‌.

பணம் சம்பாதிக்கும் குறிக்கோளில் போட்டியாளர்களும் கடுமையாகவே நடந்து கொண்டனர். இதில் தனலட்சுமி ஒருபடி மேலே சென்று தவறான வழியில் பணத்தினை எடுத்து வெற்றியையும் பெற்றார். இதனை கமலஹாசன் குறும்படம் போட்டு வெளிச்சமிட்டதோடு, கிடைத்த வெற்றியும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் பெரும்பாலான நபர்கள் தனலட்சுமியை நாமினேஷன் செய்துள்ள நிலையில் தனலட்சுமி பிக்பாஸிடம் வந்து கதறி அழுதுள்ளார்.

Categories

Tech |