Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘நான் விளையாடுனா அது ஆர்சிபி-க்கு மட்டும்தான்’ ….! கண்கலங்கிய விராட் கோலி ….!!!

2021 சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் ஆர்சிபி – கொல்கத்தா அணிகள் மோதின. இதில் ஆர்சிபி அணி தோல்வியடைந்தால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. இதனிடையே  நடப்பு ஐபிஎல் சீசனுடன் ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலக இருப்பதாக விராட்கோலி அறிவித்திருந்தார். இதனால் எப்படியும் இந்த சீசனில் கோப்பையை வென்று கொடுத்துவிட்டு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் ஆர்சிபி அணியும் சிறப்பாக செயல்பட்டது .

அதோடு புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால் நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி தோல்வியடைந்து .இதன் பிறகு போட்டி முடிந்ததும் கேப்டன் கோலி கண்கலங்கிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது அவருடன் சக வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கண்கலங்கினார். தோல்விக்குப் பிறகு பற்றிக் கூறும்போது,” ஐபிஎல்யில் நான் விளையாடினால் அது பெங்களூர் அணிக்காக மட்டும்தான். இது எப்போதும் மாறாது” என்று கூறினார்.

Categories

Tech |