Categories
சினிமா தமிழ் சினிமா

நான் எப்படி அங்க போய் பேச முடியும்….? வாரிசு ரிலீஸ் குறித்த கேள்வியால் டென்ஷனான உதயநிதி…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பொங்களுக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்புள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவி வந்தது.

அதாவது தெலுங்கில் பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து அதிக திரையரங்குகளை ஒதுக்க வேண்டும் என்ற புதிய அறிவிப்பு வெளியானது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இது குறித்து நடிகரும், தயாரிப்பாளமான உதயநிதியிடம் தெலுங்கு திரை உலகில் வாரிசு படத்திற்கு சிக்கல் ஏற்பட்டு இருப்பதை சரி செய்ய பேச்சுவார்த்தை நடத்துவீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த உதயநிதி, தெலுங்கு திரையுலகில் நாம் எப்படி பேச முடியும்? தலையிட முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |