நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த பட்டதாரி வாலிபர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் மாவட்டத்தில் வினோபாஜி நத்தம் ரோடு பகுதியை சேர்ந்த சகாயமுத்துவின் மகன் கார்த்திக். இவர் பி.காம். படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார் . இந்நிலையில் இவருடைய சகோதரரான தாமோதரன் மற்றும் அவருடைய நண்பர்கள் விஜய் ,டேவிட் ,சூர்யா, தாமஸ், விக்கி, மற்றும் ஐய்யப்பன் ஆகிய 8 பேரும் நேற்று நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அப்போது நண்பர்கள் அனைவரும் கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று வந்த பேரலையில் சிக்கி கார்த்திக் என்பவர் நீரில் மூழ்கினார். இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் கார்த்திக் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து வேளாங்கண்ணி கடலோர காவல்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது .