நண்பருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக கூலித்தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான கணேசன் என்பவருடன் தினமும் மோட்டார் சைக்கிளில் கட்டிட வேலைக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் முருகனுக்கு வேறு வேலை இருந்ததால் கணேசனை அழைக்காமல் சென்றுள்ளார்.
இதனால் கோபமடைந்த கணேசன் மோட்டார் சைக்கிளில் சென்ற முருகனை வழிமறித்து அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முருகன் சீதபற்பநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கணேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.