சசிகலாவுக்கு அதிமுகவின் கொடியை பயன்படுத்துவதற்கு முழு உரிமை உள்ளதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தபோது “அதிமுக பொதுக்குழுவில் ஒருமனதாக சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பின்னர் சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக இருக்கும் போது அவர் சிறைக்கு சென்று உள்ளார். எனவே அதிமுக கொடியை பயன்படுத்துவதற்கு முழு தகுதியும் சசிகலாவிற்கு உள்ளது.
கே.பி.முனுசாமி வெளியிட்ட கருத்தை வைத்துப் பார்க்கும்போது சசிகலா அதிமுகவில் இணைந்து கொள்வதாக தெரிகிறது. சசிகலாவை அதிமுகவில் சேர்க்காவிட்டால் அந்த கட்சி இரண்டாக பிளவுபடும். இவ்வாறு நடந்தால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வர் ஆவதற்கு வாய்ப்பு உண்டு.”இவ்வாறு அவர் கூறியுள்ளார்.