Categories
உலக செய்திகள்

தைவான் நாட்டை தனிமைப்படுத்துவதா?… ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்… -நான்சி பெலோசி…!!!

அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி, தைவானை தனிமைப்படுத்துவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று சீனாவிற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

சீன நாட்டிலிருந்து தைவான் தனிநாடாக பிரிந்து விட்டது. எனினும், சீன அரசு தங்களுடன் அந்நாட்டை சேர்த்துக் கொள்ள பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  சீனா, வலுக்கட்டாயமாக தைவானை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறது. நாங்கள் தைவான் நாட்டிற்கு  ராணுவ அடிப்படையில் பாதுகாப்பு அளிப்போம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்தார்.

இதனால், அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி, தைவான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். இதனை கடுமையாக எதிர்த்த சீனா, அவரின் பயணத்தை தடுக்க முயற்சித்தது. எனினும், அவர் தைவான் நாட்டிற்கு சென்று அதிபரை சந்தித்து, தங்கள் நாட்டின் ஆதரவை தெரிவித்தார்.

இந்நிலையில், ஜப்பான் நாட்டிற்கு சென்ற நான்சி இது பற்றி தெரிவித்ததாவது. சீன அரசு தைவான் நாட்டை தனிமைப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டை உலக சுகாதார அமைப்பிலிருந்து தள்ளி வைத்திருக்கிறார்கள். இவ்வாறு தைவான், பிற இடங்களுக்கு செல்வதையோ அல்லது கலந்து கொள்வதையோ சீனா தடுக்க முயல்கிறது. ஆனால், நாங்கள் தைவான் நாட்டிற்கு செல்வதை தடுப்பதால், தைவானை அவர்களால் தனிமைப்படுத்தி விட முடியாது என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |