இந்திய அணி வீரர்கள் ‘ஹலால்’ உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என பிசிசிஐ உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை கான்பூரில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்திய அணி வீரர்களுக்கான உணவு பட்டியலில் மாட்டிறைச்சி, பன்றி கறி ஆகிய உணவு வகைகளை எந்த உணவு வடிவிலும் உட்கொள்ளக் கூடாது எனவும், அதோடு அசைவ உணவு வகைகளில் ‘ஹலால்’ உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம் என பிசிசிஐ உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியது .இந்த செய்தி ட்விட்டர் உட்பட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியது இந்நிலையில் பிசிசிஐ பொருளாளரான அருண் துமால் இதுகுறித்து கூறுகையில்,” இந்திய அணி வீரர்கள் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி ஆகியவை சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டதாகவும் ,அவர்கள் ‘ஹலால்’ மாமிச உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டும் என செல்லப்பட்டதாகவும் விவாதங்கள் எழுந்துள்ளது .
ஆனால் பிசிசிஐ இப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கவில்லை “என்று அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில்,” இதுபோன்ற உணவு பழக்கம் குறித்த உத்தரவை நாங்கள் வெளியிடவே இல்லை. இதுகுறித்து வீரர்களுக்கும் எதுவும் தெரிவிக்கவில்லை. அதோடு இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்கள் அவரவர் உணவுத் தேவையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் .அதேசமயம் வீரர்களின் உணவு பழக்க முறையில் பிசிசிஐ தலையீடுவது கிடையாது. வீரர்களின் உணவு முறை அவர்களின் தனிப்பட்ட விருப்பம் “இவ்வாறு அவர் கூறியுள்ளார்.