Categories
கிரிக்கெட் விளையாட்டு

நாங்க அப்பவே சொன்னோம் …. ஆனா அவரு கேட்கல ….. பிசிசிஐ எச்சரிக்கையை மீறிய பண்ட் ….!!!

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்களில்  ரிஷப் பண்ட் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது . இதில் சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்கிடையே 20 நாட்கள் இந்திய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் வீரர்கள் பலரும் நகரில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று பொழுதை கழித்து வந்தனர். இதில் சிலர் வீரர்கள் அங்கு நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் மற்றும் யூரோ கால்பந்து தொடரை நேரில் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது யூரோ கால்பந்து தொடரை நேரில் பார்க்கச் சென்ற இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேனும்,விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட்க்கு கொரோனா தொற்று பாதிப்பு   ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தனது நண்பர் வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியது. மேலும் ரிஷப் பண்ட் யூரோ கால்பந்து தொடரை நேரில் காணச் சென்ற புகைப்படத்தை இணையத்தில்  பதிவிட்டிருந்தார்.அந்த புகைப்படத்தில் முக கவசம் அணியாமல் நண்பர்களுடன் சுற்றித் திரிந்ததாக தெரிகிறது. இதற்கு முன்பாக  பிசிசிஐ வாரிய செயலாளர் ஜெய்ஷா இந்திய அணி வீரர்களுக்கு இமெயில் ஒரு கருத்து ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் தற்போது இங்கிலாந்து டெல்டா வகை கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் கூட்டமான இடங்களுக்கு செல்வதை வீரர்கள் தவிர்க்க வேண்டும் என்று எச்சரித்தார். ஆனால் இந்த எச்சரிக்கையும் மீறி ரிஷப் பண்ட் யூரோ கால்பந்து தொடரை  நேரில் பார்க்க சென்றுள்ளார். இதனிடையே பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி கூறுகையில்,” இங்கிலாந்தின் ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்கள் விடுமுறையில் இருந்ததால் பொழுதைக் கழிக்க அங்கு சென்றுள்ளனர். மேலும் அனைத்து நேரத்திலும் அவர்கள்  முக கவசம் அணிந்து கொண்டு இருப்பது உடல் ரீதியாக சாத்தியமற்றது” என்று அவர் கூறினார்.

Categories

Tech |