சிஎஸ்கே அணி வருகிற 24-ம் தேதி சார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது .
14 வது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் நடைபெற்று வருகிறது.இதில் துபாயில் நடந்த முதல் போட்டியில் சென்னை -மும்பை அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் குவித்தது. இதில் அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 58 பந்துகளில் 88 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பிராவோ 8 பந்துகளில் 3 சிக்சர் அடித்து விளாசி 23 ரன்கள் குவித்தார். இதன்பிறகு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. இறுதியாக மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சவுரப் திவாரி 50 ரன்கள் குவித்தார்.
நடப்பு சீசனில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணிடம் தோற்றது .இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் சென்னை அணி முதல் இடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து போட்டி முடிந்தவுடன் கேப்டன் டோனி கூறும்போது,” நாங்கள் ஒரு கட்டத்தில் 30 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தோம். இதனால் ஒரு நல்ல ஸ்கோர் வேண்டும் என நாங்கள் 140 ரன்கள் வரை எதிர்பார்த்தோம் .ஆனால் எதிர்பார்த்ததை விட 160 ரன்னை நெருங்கிவிட்டோம் . ருதுராஜ் கெய்க்வாட், பிராவோ இருவரும் நாங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக விளையாடினார் . ஒரு பேட்ஸ்மேன் ஆட்டத்தின் இறுதி வரை களத்தில் நிற்பது புத்திசாலித்தனம்” என்று கூறினார். இதையடுத்து வருகிற 24-ஆம் தேதி சென்னை அணி பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது.