Categories
உலக செய்திகள்

நாங்க உதவ ரெடி… ஆப்கான் மக்களுக்கு ரூ.1,076 கோடி கொடுத்த அமெரிக்கா..!!

மனிதாபிமானம் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ரூ.1076 கோடி நிவாரணமாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் முகாமிட்டு இருந்த போது தாலிபான்களுடன்  ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா அங்கிருந்து வெளியேறியது. இதையடுத்து தாலிபான்கள் நாடு முழுவதையும் கைப்பற்றினர். இப்போது தாலிபான்கள் ஆட்சியை பிடித்து இருப்பதால் பயங்கரவாத செயல்களை கைவிடுவதாக கூறினர். ஆகவே அனைத்து நாடுகளும் ஆப்கானிஸ்தானுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதில் ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு உதவ முடிவெடுத்துள்ளனர். அதனைப் போல அமெரிக்காவும் உதவ முன்வரவேண்டும் என்று தாலிபான்கள் வேண்டுகோள் விடுத்தபோது எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

இந்நிலையில் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ரூ.1076.85 கோடி உதவி செய்வதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியூறவு துறை அமைச்சர் டோனி பிளிங்கன் கூறியதாவது, “ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவக்கூடிய வகையில், இந்த உதவியை  அறிவித்து இருக்கிறோம் என்றும், இந்த உதவியை நாங்கள் நேரடியாக சென்று கொடுப்பதில்லை என்று கூறினார். சர்வதேச சேவை அமைப்பான ஐநா சபையின் அகதிகள் மறுவாழ்வு அமைப்பு, யுனிசெப், சர்வதேச குடிப்பெயர் மக்கள் நல அமைப்பு மற்றும் உலக சுகாதார நிறுவனம் போன்றவற்றிடம் இந்த பணம் ஒப்படைக்கப்படும்.

ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்டுள்ள 1,80,00,000 மக்களுக்கு இந்த உதவி பயன்பெறும். முன்னதாகவே ஆப்கானிஸ்தானில் உள்ள அகதிகளுக்கு இந்த ஆண்டு மட்டும் ரூ. 3500 கோடியை  நிதியாக  உயர்த்தியுள்ளோம். மேலும் மக்களின் உணவுத் தேவை, சுகாதார வசதிகள், பனிக்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள், அவசரத் தேவைகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஆகியவற்றுக்கு இது உதவியாக இருக்கும். ஆப்கானிஸ்தான் மக்களுக்காக நாங்கள் தொடர்ந்து உதவி செய்ய தயாராக இருக்கிறோம்” என்று கூறினர்.

Categories

Tech |