Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நாங்க யாரும் விராட் கோலி கிட்ட சொல்லல” ….! போட்டு உடைத்த தேர்வுக்குழு தலைவர் ….!!!

டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகும்படி விராட் கோலியிடம் யாரும் சொல்லவில்லை என இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர்  கூறியுள்ளார் .

இந்திய டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலக  முடிவெடுத்தபோது இந்த முடிவை கைவிடுங்கள் என அவரை வலியுறுத்தியதாகவும் ,ஆனால் அவர் அதை ஏற்கவில்லை என்று பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியிருந்தார் .ஆனால் கேப்டன்  பதவியிலிருந்து  விலக வேண்டாம் என பிசிசிஐ தரப்பில் யாரும் என்னை கேட்கவில்லை என விராட் கோலி சமீபத்தில் கூறி சர்ச்சையை கிளப்பினார். இந்த விவகாரத்தில் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா நேற்று அளித்த பேட்டியில்  கூறும்போது,” டி20 கேப்டன்சிலிருந்து  விராட் கோலி விலக  எடுத்த முடிவு எங்களை ஆச்சரியப்படுத்தியது .

தேர்வு கமிட்டியினர் ,பிசிசிஐ நிர்வாகிகள் அனைவரும் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்றும் ,டி20 உலக கோப்பை முடிந்த பிறகு இது பற்றிப் பேசிக் கொள்ளலாம் என்று விராட் கோலியிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார் .டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகும்படி விராட்கோலியிடம்  யாரும் சொல்லவில்லை. இது அவருடைய தனிப்பட்ட முடிவு .அதே சமயம் டி20 அணி கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகியதும் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு  ஒரே கேப்டன்  இருக்க வேண்டும் என முடிவு செய்து ரோகித் சர்மாவை ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக நியமித்தோம் ” இவ்வாறு அவர் கூறினார்.

Categories

Tech |