Categories
கிரிக்கெட் விளையாட்டு

” நாங்கள் எங்களுக்கான தனி ஸ்டைலில்”…..! ‘ மீண்டும் திரும்புவது அவசியமாகும் ‘- டீன் எல்கர்…!!!

தென்னாப்பிரிக்கா அணி வெஸ்ட் இண்டீஸில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

சர்வதேச கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கென, ஒரு தனி இடம் உண்டு. இந்த அணி பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் ஆகிய மூன்றிலும் சிறப்பாக இருக்கக்கூடியவர்கள். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக இந்த ஆணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. கேப்டனாக இருந்த டு பிளிஸ்சிஸ் பதவியிலிருந்து விலகிய பிறகு  , டி காக் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டார். மூன்று வடிவிலான போட்டியிலும் டி காக் கேப்டனாக இருந்ததால், அவருடைய பணிச்சுமையை குறைக்க ,டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அவருக்கு பதில் பேட்ஸ்மேனான  டீன் எல்கர் ,கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையிலான தென்னாபிரிக்க அணி, வெஸ்ட்இண்டீஸில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு            2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இதில் முதல் போட்டி ஜூன் 10ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்கா      அணிக்குரிய  தனி வழியில் ,மீண்டும் திரும்புவது அவசியமாகும் என்று டீன் எல்கர் கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, ” அதிகமான போட்டிகளில் இடம் பெற்று ,நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியமாகும். கடந்த காலகட்டத்தில்  நாங்கள் மிகவும்  சீராக இருக்கவில்லை என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் சிறந்த பேட்டிங் ஆர்டர் மற்றும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களையும் எங்கள் அணியில் வைத்துள்ளோம். இதனால் போட்டியில்  மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்புவது அவசியமாகும். சில வருடங்களுக்கு முன் அணி எப்படி சிறந்து விளங்கியதோ , அதேபோல மீண்டும் திரும்பி முன்னேற்றம் அடைய முடியும் என்று உணர்கிறேன். என்னுடைய மிகப்பெரிய இலக்கே  இதுதான்.  இதற்காக   கடுமையாக உழைக்க வேண்டும்” என்று அவர் கூறினார் .

Categories

Tech |