Categories
உலக செய்திகள்

நாங்கள் இதை எதிர்பார்க்கவே இல்லை…. அணு ஆயுதங்கள் அதிகரிப்பு…. எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா….!!

கணித்ததைவிட சீனா அதிவேகமாக அணு ஆயுதங்களை அதிகரித்து வருவதாக அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் தெரிவித்து உள்ளது.

ஒரு ஆண்டுக்கு முன் அமெரிக்கா நாட்டின் அதிகாரிகள் எதிர்பார்த்ததை விட சீனா தன் அணுசக்தியினை மிக வேகமாக அதிகரித்து வருகிறது என்று பென்டகன் ஆய்வானது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது “சீனாவின் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 6 ஆண்டுகளுக்குள் 700 ஆக அதிகரிக்கலாம் என்றும், 2030-க்குள் 1,000 ஆக உயரும் என்றும் அறிக்கை கூறுகிறது.

மேலும் தைவானின் நிலை பற்றி சீன நாட்டின் நோக்கங்கள் குறித்து நாங்கள் எச்சரிக்கையுடன் உள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதுமட்டுமின்றி இந்த அறிக்கையானது சீனா உடனான வெளிப்படையான மோதலை பரிந்துரைக்க இல்லை. ஆனால் அது போர்க்களம், காற்று, நிலம், கடல், விண்வெளி மற்றும் சைபர்ஸ்பேஸ் ஆகிய அனைத்துக் களங்களிலும் அமெரிக்காவிற்கு சவால் விடும் சீன இராணுவத்தின் நோக்கத்தை சுட்டி காட்டுகிறது.

Categories

Tech |