சிவப்பு பட்டியல் நாட்டை சேர்ந்த நால்வர் உண்மையை மறுத்ததால் தலா 10,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டது.
பிரிட்டன் நிர்வாகம் குறிப்பிட்ட 33 பகுதிகளை சிவப்பு பட்டியல் நாடுகள் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் அறிவிக்கப்பட்ட பகுதியிலிருந்து வெளியேறி விமானத்தில் பயணம் செய்த 4 பேருக்கு தலா 10 ஆயிரம் பவுண்டுகள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிக்கப்பட்ட நான்கு பேரும் தாங்கள் சிவப்பு பட்டியல் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை மறுத்துள்ளனர்.
அவர்கள் உண்மையை மறுத்ததால் நால்வருக்கும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் நான்கு பேரும் பர்மிங்காம் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளனர். அப்போது விமான நிலைய அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தியதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சிவப்பு பட்டியல் நாடுகளிலிருந்து வந்துவிட்டு இல்லை என்று பொய் கூறினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று பிரிட்டன் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த நால்வரும் பொய் கூறியதால் அவர்களுக்கு பத்தாயிரம் பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.