‘தசரா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சமந்தா தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர். இவர் அடுத்ததாக ”தசரா” என்னும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கும் இந்த படத்தில் நானி நடிக்கிறார். இந்த படத்தின் கதாநாயகியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார்.
சமீபத்தில், இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டர் சமூகவலைதளத்தில் வைரலானது. இந்நிலையில், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க இருக்கிறார். மேலும், அவர் இந்த படத்தில் ஒப்பந்தம் ஆகிவிட்டதாகவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.