Categories
உலக செய்திகள்

நன்கொடை கொடுத்த இந்தியா… குவியும் பாராட்டுகள்… ஐ.நா. நன்றி…!!!

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா கொராேனா தடுப்பூசியை நன்கொடையாக கொடுத்துள்ளதால் அந்நாட்டு ஐ.நா நன்றி தெரிவித்து பாராட்டியுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத்தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் இந்தியா ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் கொரோனா  தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வந்த நிலையில் தற்போது ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில்  கொரோனா பாதிப்பு மீண்டும்  அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தற்போது வரை  2,466 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மேலும் 56,177 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனையடுத்து  ஐ.நா. சபை பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் மற்றும் ஐ.நா. உதவி மிஷன் பிரதிநிதியான டிபோரா லியான்ஸ் ஆகியோர்  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தாவிட்டால் 3-வது அலை ஏற்படக்கூடும் என்று தெரிவித்துள்ளனர். அதனால்அந்நாட்டில் தடுப்பூசி போடும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது  .ஆனால் சீனா குறைந்த அளவிலான தடுப்பூசிகளை மட்டுமே ஆப்கானிஸ்தானுக்கு வழங்கியுள்ளது என்று கூறியுள்ளனர்.

மேலும் தடுப்பூசிகள் நாட்டிலுள்ள குறைந்த அளவு மக்களுக்கு மட்டுமே செலுத்த முடியும் என்று கூறியுள்ளது. இதனை அறிந்த இந்தியாவின் ஐ.நா தூதர் பி.எஸ் திருமூர்த்தி கூறுகையில், இந்தியா மனிதாபிமான அடிப்படையில் கொரோனா பாதிப்பை தடுக்க 9 லட்சத்து 68 ஆயிரம் அளவுள்ள கோவேக்சின் தடுப்பூசியை ஆப்கானிஸ்தானுக்கு வழங்க உள்ளது.அதுமட்டுமல்லாமல் அதில் 5லட்ச டோஸ்கள் இந்தியா மானியமாக வழங்குகிறது என்று கூறியுள்ளார். மேலும் 75,000 மெட்ரிக் டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு பேரிடர்  கால உணவுப் பாதுகாப்பின்மை ஏற்படக்கூடாது என்பதற்காக  வழங்கியுள்ளது .இதனால் ஆப்கானிஸ்தான் கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கியாதற்காக பாராட்டி இந்தியாவிற்கு நன்றி தெரிவித்து உள்ளது .

Categories

Tech |