Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி அதிமுக வேட்பாளர் நாராயணன் வேட்பு மனு ஏற்பு.!!

நாங்குநேரி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது 

தமிழகத்தில் காலியாக இருக்கும் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில்  விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும், நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் வேட்பாளராக போட்டியிடுவார்கள் என்று  அறிவிகப்பட்ட நிலையில், கடந்த 21ஆம் தேதி முதல் தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்தது.

Seithi Solai

கடைசி நாளான நேற்று இரண்டு தொகுதி வேட்பாளர்களும் வேட்பு மனுதாக்கல் செய்தார். அதேபோல திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில்  வேட்பாளராக போட்டியிடும் நா புகழேந்தியும், நாங்குநேரி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அங்கு போட்டியிடும் ரூபி மனோகரனும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Image result for நாங்குநேரி திமுக வேட்பாளர் நாராயணன்

இந்நிலையில்  வேட்புமனு பரிசீலனை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாங்குநேரி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். வேட்புமனுக்களை திரும்ப பெற 3 ஆம் தேதி கடைசி நாள். அன்று மாலை இறுதி வேட்பாளர்கள்  பட்டியல் வெளியிடப்படுகிறது.

Categories

Tech |