கடன் வாங்கி விட்டு தலைமறைவாக இருந்த நண்பனை காட்டிக் கொடுத்ததால் தொழிலாளியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொசப்பாளையம் பங்காள தெருவில் யுவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாம்பு பிடிப்பது மற்றும் ஆட்டோ ஓட்டுனராக இரு வேலைகள் செய்து வந்துள்ளார். இவருக்கு தணிகைவேல் என்ற நண்பர் இருக்கிறார். இவர் தினேஷ் என்பவரிடம் 9000 ரூபாய் கடன் வாங்கிவிட்டு தலைமறைவாக இருந்துள்ளார். அதன்பின் தினேஷ் யுவராஜிடம் தணிகைவேல் எங்கு இருப்பதாக கேட்ட போது அவர் அக்கா வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறி உள்ளார்.
இதனை அறிந்த தினேஷ் அவரை நேரில் சந்தித்து பணத்தை கேட்டுள்ளார். அப்போது அவர் தனது தாயின் நகையை அடமானம் வைத்து பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளார். பின்னர் தன்னை காட்டிக் கொடுத்ததற்காக யுவராஜிடம் தணிகைவேல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து கோபத்தில் தணிகைவேல் அருகில் இருந்த கல்லை எடுத்து யுவராஜன் தலையில் தாக்கியதில் அவர் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தணிகைவேலை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தணிகைவேலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்துள்ளனர்.