நண்பனை கல்லால் தாக்கிக் கொலை செய்த வாலிபர்கள் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் 2 பேர் சரணடைந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் விசாரணையில் அவர்கள் சதீஷ் மற்றும் விஜய் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவருடைய நண்பரான அருண் என்பவருடன் புதர் ஒன்றில் மது அருந்தியுள்ளனர். அப்போது தங்களது செல்போனை அருண் திருடி விட்டதாக கூறி தகராறில் ஈடுபட்டு அருகில் இருந்த கல்லை எடுத்து அருணின் தலையில் போட்டுவிட்டு அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். பின்னர் வந்து பார்த்த போது அருண் இறந்து கிடந்துள்ளார்.
இதனை தொடர்ந்து தங்களை காவல்துறையினர் பிடித்து விடுவார்கள் என பயந்து போன அவர்கள் இருவரும் வக்கீல் ஒருவரின் உதவியுடன் போலீசில் சரண் அடைந்துள்ளனர். பின்னர் கொலை நடந்த இடம் புதர் நிறைந்த பகுதி என்பதால் யாருக்கும் இது பற்றி தெரியவில்லை. மேலும் கொலை நடந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்று பார்த்து அருணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சதீஷ் மற்றும் விஜய் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.