Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர்…. ஆற்றின் கரையோரம் கிடந்த சடலம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நண்பர்களுடன் குளிக்க போன வாலிபர் ஆழமான பகுதிக்கு சென்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சி. எல்.ரோடு பகுதியில் சகாபுதீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் தமிழக-ஆந்திர எல்லையில் இருக்கும் புல்லூர் தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த நிலையில் அவர் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினரும் சாகபுதீனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் சகாபுதீனை கண்டுபிடிக்க இயலவில்லை. இதனை அடுத்து 2 நாட்களுக்கு பின் புல்லூரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தமிழக பகுதியான ஆவாரம் குப்பம் பாலாற்றின் கரையோரம் சடலமாக கிடந்துள்ளார். பின்னர் அவரின் உடலை காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |