Categories
சினிமா தமிழ் சினிமா

நந்தா படத்தின் மூலம் அறிமுகம்…. வில்லனான வினோத் கிஷன்…. வெளிவந்த சுவாரஸ்யமான தகவல்கள்….!!

நந்தா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான வினோத் கிஷன் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழ் திரையுலகில் நந்தா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் வினோத் கிஷன். இந்த படத்திற்கு பிறகு பல பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தாலும் அதில் ஆர்வம் இல்லாததால் படிப்பில் கவனம் செலுத்தியுள்ளார். இதனை அடுத்து கல்லூரி பயிலும் போது ‘நான் மகான் அல்ல’ திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த கதாபாத்திரம் பற்றி இயக்குனர் சுசீந்திரன் வினோத்திடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் அதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு 3 மாதங்கள் பயிற்சி எடுத்துக் கொண்டாராம்.

இந்த படத்தை தொடர்ந்து அவருக்கு பல படங்களில் வில்லனாக நடிப்பதற்கு வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் வினோத் கிஷன் முக்கியமான வேடங்களில் மட்டுமே நடித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர் நடிப்பில் வெளியான ‘விடியும் முன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதற்கு பிறகு இவர் நடித்த இரண்டு படங்களும் வெளியாவதற்கு தாமதமாகி உள்ளன. இது பற்றி அவரிடம் கேட்டபொழுது கூறியதில் “ஒரு படத்தில் நடிப்பது மட்டும் தான் நம்மிடம் உள்ளது. அதனை வெளியிடுவது குறித்து படக்குழுவினர் தான் முடிவு செய்ய வேண்டும்.

மேலும் தான் நடிக்கும் படக் கதைகள் அனைத்தும் வித்தியாசமாக இருப்பதால் படம் வெளிவருவதில் தாமதம் ஏற்படலாம்” என்று  கூறியுள்ளார். இதனை அடுத்து அந்தகாரம் திரைப்படம் அவருக்கு ஒரு புதிய அனுபவத்தையும் திருப்பத்தையும் கொடுத்துள்ளது. அதில் அவரின் நடிப்பை பலரும் பாராட்டியுள்ளனர். மேலும் இவரது நடிப்பில் வெளியான ‘குட்டி ஸ்டோரி’ series வெற்றிகரமாக ஓடியது. இவர் தற்பொழுது பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |