Categories
தேசிய செய்திகள்

நந்திகிராமத்தில் நிச்சயமாக…வெற்றி பெறுவது உறுதி …மம்தா பானர்ஜி ஆவேச பேச்சு …!!!

பாஜகவினருக்கு இந்த மாநிலத்தில் கட்சி தலைவர்கள் இல்லாததால் ,எங்கள் கட்சி தலைவர்களை கடன்வாங்கியதாக மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தா பிரச்சாரத்தில் பேசினார் .

கொல்கத்தாவில் கூச் பெகரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில், மேற்கு வங்காள முதலமைச்சரான மம்தா பானர்ஜி பிரச்சாரக் கூட்டத்தில் ,பாஜகவை பற்றி சரமாரியாக பேசினார். அவர் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில், மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில், நிச்சயம் வெற்றி பெற்று ,மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம். நான் போட்டியிட்ட நந்திகிராமம் தொகுதியில், நிச்சயமாக வெற்றி பெறுவேன் ,என உறுதியுடன் தெரிவித்தார். நம்முடைய கட்சி வேட்பாளர்களும் ,அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று கூறினார் .

இதைத்தொடர்ந்து உள்துறை அமைச்சரான அமித்ஷா, தேர்தல் ஆணையத்தை கைக்குள் வைத்துக்கொண்டு வழிநடத்தி வருகிறார். மத்திய படைகள் பாஜக கட்சியினருக்கு சாதகமாக, வேலை செய்கிறார்கள் என்றும், இரவு நேரங்களில் கிராம மக்களை மிரட்டுகின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அவ்வாறு பாஜகவினர் உங்களை மிரட்டினால், அதற்கு பயப்படாமல் எதிர்த்து துணிவோடு  நில்லுங்கள் என்று கூறினார் .

பாஜக கட்சிக்கு இந்த மாநிலத்தில் ,எந்த தலைவர்களும் இல்லாத காரணத்தால் ,எங்கள் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களையும், தலைவர்களையும் கடன் வாங்கி இருப்பதாக கூறினார். அதுமட்டுமல்லாது ஒத்துழைக்காத எங்கள் கட்சித் தொண்டர்களை ,பாஜகவினர் கொலை செய்து வருவதாகவும் ,தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பதன் காரணத்தினால் ,அமைதியாக இருக்கிறேன், என்று கூறினார் . தேர்தல் முடிந்த பின்பு ,குற்றம் செய்த அனைவரையும் சட்டத்தின்  முன் , நிறுத்தி காட்டுவேன்  என்று ஆவேசமாக பேசினார்.

Categories

Tech |