Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை வழிபாட்டு முறை

நரசிம்ம ஜெயந்தியின் விரத முறைகள்…!

நரசிம்ம ஜெயந்தி அன்று நாம் கடைபிடிக்க வேண்டிய விரத முறைகள்…!!

இறைவன் எங்கும் நிறைந்துள்ளார். தூய பக்தி கொண்டவர்கள் அசுரர்கள் என்றாலும் அவர்களை காப்பது இறைவனின் கடைமையாகும். அப்படி தன்னை நம்பும் பக்தனை காக்க இறைவன் தாமதிக்காமல் வருவார் என்பதை பறைசாற்றும் வரலாறு நரசிம்ம அவதாரம் ஆகும்.

நரசிம்ம அவதார நாளை நரசிம்ம ஜெயந்தியாக  கொண்டாடுகின்றோம். நரசிம்மர் வழிபாட்டிற்கு உகந்த நேரம் அந்தி சாயும் நேரமான மாலை 4:30 மணி முதல் இரவு 7:30  மணி வரையாகும். அன்று விரதமிருந்து இந்த நேரத்தில் நரசிம்மரை வழிபட்டால் சிறப்பான பலன் நமக்குக் கிடைக்கும்.

நரசிம்மருக்கு செவ்வரளி போன்ற சிகப்பு வண்ண மலர்கள் மற்றும் துளசி, சர்க்கரைப் பொங்கல், பானகம் மற்றும் நரசிம்மரின் கோபத்தை தணிக்கும் மற்ற குளுமையான பொருட்களை பூஜைக்கு கொடுத்து வழிபடலாம். மேலும் நரசிம்மர் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதால் விஷ்ணுவுக்கு ஏற்ற மலர்கள், வஸ்திரம், நெய்வேத்யம் ஆகியவற்றை நரசிம்மருக்கு படைத்து வழிபாடு செய்யலாம்.

மேலும் மனதில் உள்ள அசுர குணங்களை அகற்றினால் நரசிம்மரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். நரசிம்மர் கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே நரசிம்மரை வழிபட்டு அவருக்கு உரிய மந்திரத்தை  வழிபட்டு ஜபிக்கலாம்.

Categories

Tech |