காங்கிரஸ், பிரதமர் மோடி தேர்தல் விதிகளை மீறியுள்ளார் என தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.
ராஜீவ்காந்தியைக் கறைபடியாதவர் என கூறி வந்த மோடி , தற்போது ”ஊழல்களில் முதன்மையானவர் அதனால் ,அவருடைய ஆயுள் முடிந்து விட்டது” என பேசியுள்ளார் என்று காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
மறைந்த ராஜீவ் காந்தியை , அவமதிக்கும் வகையில் மோடி பேசியுள்ளார் எனவும் ,புகாரில் கூறப்பட்டுள்ளது .