இந்தியா பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டில் புதிதாக பதவியேற்றுள்ள பிரதமருக்கு தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் நேற்றுடன் பெஞ்சமின் நெதன்யாகு அரசின் 12 ஆண்டு ஆட்சி காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் யாருமே எதிர்பாராத விதமாக அரபு கட்சிகள் அவருக்கு எதிராக வலதுசாரியுடன் கூட்டணி வைத்து புதிய கூட்டணி அரசையும் நிறுவி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டணியுடைய பிரதமராக நஃப்டாலி பென்னட் வலதுசாரி தேசியவாதி பதவியேற்றுள்ளார். இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமரான நஃப்டாலி பென்னட்-க்கு தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் “இஸ்ரேலின் பிரதமராக பதவியேற்றுள்ள மரியாதைக்குரிய நஃப்டாலி பென்னட்-க்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்கள் எனவும், அடுத்த வருடம் நாம் தூதரக உறவுகளை மேம்படுத்தும் வகையில் 30 வருடங்களை கொண்டாடும் சமயத்தில் தங்களை சந்திக்கவும், நட்புறவை இரு நாடுகளுக்கிடையே ஆழப்படுத்தவும் எதிர்நோக்கி காத்திருப்பதாக” தெரிவித்துள்ளார்.