Categories
தேசிய செய்திகள்

தாய்லாந்து மொழியில் திருக்குறள் வெளியிடவுள்ள நரேந்திர மோடி…..!!

தாய்லாந்து வாழ் இந்தியர்களிடையே உரையாற்றவுள்ள நரேந்திர மோடி, தாய்லாந்து மொழியில் திருக்குறள் நூலை வெளியிடவுள்ளார்.

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக தாய்லாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டார். அங்கு நடக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பிலும் பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டணியின் மாநாட்டிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார். தாய்லாந்து வாழ் இந்தியர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் சீக்கிய மதகுரு குருநானக்கின் 550ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நாணயம் வெளியிடவுள்ளார்.

Image

திருக்குறளை தாய்லாந்து மக்களின் பிரதான மொழியான ‘தாய்’ மொழியில் வெளியிட்டு மக்களிடையே உரையாற்றவுள்ளார். முனைவர் பட்டம் பெற ஆய்வு செய்யும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த 1000 பேருக்கு இந்தக் கூட்டமைப்பின் மூலம் ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. இதற்காக திட்டத்தின் முழுத் தொகையான ரூ. 300 கோடியை இந்திய செலவு செய்யவுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளிடையே நல்லுறவை மேம்படுத்த நல்லுறவை மேம்படுத்த இந்தக் கூட்டம் உதவும்.

Image

இறக்குமதி செய்யும் விவசாய பொருள்களின் மீது விதிக்கப்படும் தொகையை குறைக்க இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் இந்திய விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்து நிலவுவதால் நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

Categories

Tech |