லண்டனில் வீட்டிற்குள் புகுந்த நரிக்கு தம்பதியர் உணவு அளித்துள்ளனர்.
லண்டனில் தம்பதியரான நட்டாஷா பிரயாக் மற்றும் ஆடம் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்கள் வீட்டினுடைய கதவை பூட்டாமல் காரிலிருந்த பொருளை எடுக்கச் சென்றுள்ளார்கள். அதன்பின் வீட்டினுள் நுழைந்த ஆடம் நாய் போன்ற உருவம் இருப்பதைக்கண்டு அதனை விரட்டியடிப்பதற்கு முயற்சித்துள்ளார். ஆனால் அது கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்ததுள்ளது. அதன்பின் அந்த உருவம் நாயில்லை நரி என்று உணர்ந்த தம்பதியர் அதனை விரட்டுவதற்கு முடிவு செய்து தேடியுள்ளனர்.
இதனையடுத்து தம்பதியர் நரி வாஷிங் மெஷினில் இருப்பதை கண்டுபிடித்து அதை விரட்டுவதற்கு முயன்றும், அது நகர்வதாக தெரியவில்லை. இதனைத்தொடர்ந்து தம்பதியர் நரியினுடைய கண்ணுக்கு தெரியும்படி உணவை வைத்துள்ளார்கள். அதனை சாப்பிட்ட நரி எந்தவித தொந்தரவும் செய்யாமல் வெளியே சென்றுள்ளது. இதனை நட்டாஷா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.