Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காணாமல் போன செல்போன்…. வசமாக சிக்கிய தூய்மை பணியாளர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

நர்சிங் மாணவியிடம் செல்போன் திருடிய பெண் தூய்மை பணியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை திருவொற்றியூர் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோனிகா என்ற மகள் உள்ளார். இவன் நெல்லை அரசு மருத்துவமனை விடுதியில் தங்கியிருந்து நர்சிங் படித்து வருகிறார். இந்நிலையில் மோனிகா மருத்துவமனையில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனை ஒரு மேஜையில் வைத்திருந்தார். இதனையடுத்து சிறிது நேரம் கழித்து பார்த்தபோது மேஜையில் வைத்திருந்த செல்போன் காணாமல் போயிருந்ததை கண்டு மோனிகா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து மோனிகா பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மோனிகாவின் செல்போனை திருடியது அதே மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வரும் பாளையங்கோட்டை பகுதியில் வசிக்கும் ஆனந்தசெல்வி  என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆனந்தசெல்வியை கைது செய்ததோடு அவரிடம் இருந்த செல்போனையும் மீட்டனர்.

Categories

Tech |