நார்வே அமைச்சரின் பெயரில் இருந்த போலி கணக்கை ட்விட்டர் நிறுவனம் உறுதி செய்த நிலையில், அது அந்நிறுவனத்தின் தவறில்லை எனவும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
நார்வேயின் புதிய நிதி அமைச்சரின் பெயரிலிருந்த போலி ட்விட்டர் கணக்குக்கு உறுதிசெய்யப்பட்ட கணக்கு என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் இது ட்விட்டர் நிறுவனத்தின் தவறல்ல என்று கூறப்படுகிறது. மேலும் நார்வே நாட்டின் பிரதமர் அலுவலகமும், பாதுகாப்பு கழகமும் தவறுதலாக போலி கணக்கை ட்விட்டர் நிறுவனத்துக்கு அனுப்பிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இதில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் நார்வே நிதியமைச்சர் சொந்தமாக எந்வொரு ட்விட்டர் கணக்கையும் வைத்திருக்கவேயில்லை என்பதுதான் உண்மை ஆகும். அவரது பெயரில் ஏராளமான போலி ட்விட்டர் கணக்குகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதில் ஒன்றை பிரதமர் அலுவலகம் மற்றும் பாதுகாப்பு கழகம் இணைந்து ட்விட்டர் நிறுவனத்தின் உறுதிப்படுத்தலுக்கு அனுப்பி இருந்ததே இந்த குளறுபடிகளுக்குக் காரணம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.