நாசா விண்வெளி ஆய்வு மையம், வேற்றுகிரக வாசிகள் குறித்த ஆய்விற்கு மதகுருமார்களை பணியமர்த்த திட்டமிட்டிருக்கிறது.
வேற்றுகிரகவாசிகள் பற்றி நீண்ட நாட்களாக நாசா, ஆய்வு மேற்கொண்டு வருகிறது. எனினும், அனைத்து மதங்களிலும் வேற்றுகிரகவாசிகள் குறித்த சில நம்பிக்கை கதைகள் இருக்கிறது. எனவே, இவற்றை கட்டுக்கதைகள் என்று விட்டுடாமல், அவை தங்கள் ஆய்வுக்கு பயன்படுமா? என்ற அடிப்படையில் நாசா விஞ்ஞானிகள் புதிய முயற்சியை மேற்கொள்ளவுள்ளனர்.
அதன் படி, உலகத்தில் இருக்கும் வெவ்வேறு மதங்களை சேர்ந்த, மதகுருமார்கள் 24 பேரை இதற்காக பணியமர்த்த திட்டமிடப்பட்டிருக்கிறது. அவர்கள், வேற்றுகிரக வாசிகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள்? என்று விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறார்கள்.