நாசா கடற்பசுக்களோடு நெபுலாவின் கண்கவர் புகைப்படம் ஒன்றை ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது நெட்டிசன்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாசா கடந்த 8-ம் தேதி அன்று உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு மனாட்டி என்ற கடற்பசுக்களோடு நெபுலாவின் கண்கவர் புகைப்படம் ஒன்றை ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நெபுலாவுக்கு W50 என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், இது 700 ஒளி ஆண்டுகள் நீளமான சூப்பர் நோவா எச்சம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நாசா நெபுலா மற்றும் கடற்பசுக்களின் வினோதமான ஒற்றுமை காரணமாகவே அதற்கு W50 என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் சூப்பர்நோவா போன்ற நட்சத்திரங்கள் வெடிப்பால் வெளியாகும் தூசி மற்றும் வாயுக்களில் இருந்து நெபுலாக்கள் வருகின்றனர் என்ற தகவலையும் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் நீர்வாழ் உயிரினத்தின் உடல் அமைப்போடு W50 நோவா ஒத்துப்போவதாகவும் நாசா சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது. இதற்கிடையே முதன் முதலில் நோவா மற்றும் கடற்பசுக்கள் குறித்து ஆராய்ந்த NRAO ஊடக தயாரிப்பாளர் டானியா புர்ச்செல் மற்றும் NRAO-ன் நிர்வாக உதவியாளரும், இயக்குனருமான ஹெய்டி வின்டர் வானியல் மற்றும் உயிரியல் என இரு உலகங்களையும் இணைக்கும் மிக அற்புதமான காட்சி என்று விவரித்துக் கூறியுள்ளனர்.
சுமார் 20,000 வருடங்களுக்கு முன்பு வெடித்த சூப்பர்நோவா அதன் வாயுக்கள் மூலம் வெளிப்புறத்தில் மேகம் மற்றும் குமிழிகளை உருவாக்கி அனுப்பிய ஒரு மாபெரும் நட்சத்திரத்தின் எச்சம் தான் W50 என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நெபுலாவுக்கும், கடற்பசுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக பல பண்புக்கூறுகள் காணப்படுவதுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த “கடல் பசு” கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வான உடல்கள் குறித்த பல தகவல்களையும் வெளியிடும் நாசா தற்போது வெளியிட்டுள்ள இந்த நெபுலா கண்கவர் புகைப்படத்திற்கு பெரும்பாலான லைக், கமெண்ட், வியூஸ், ரீடீவீட்டுகளையும் பெற்று வருகிறது.