வியாழன் கோளின் துணைக்கோளான கேனிமீட்டில் நீர் ஆவியாதலை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சூரிய குடும்பங்களான ஒன்பது கோள்களில் மிகப்பெரிய கோள் வியாழன் ஆகும். வியாழன் கோளின் துணை கோனான கேனிமீட் மிகப்பெரியதாகும். மேலும் இதில் பூமியில் இருக்கும் நீரை விட அதிகமாக இருக்கிறது என்றும் சுமார் 170 கிலோமீட்டர் ஆழத்தில் திரவ நிலையில் இருப்பதாகவும் மேற்பரப்பில் பனிக்கட்டிகளாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனிடையே கடந்த 1998 ஆம் ஆண்டு ஹப்பிள் தொலைநோக்கி மூலம் இன்ஸ்பெக்டரான இமேஜிங் முறையில் புகைப்படம் எடுக்கப்பட்டது.
இதனை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அதிக குளிர் இருப்பதால் நீர் ஆவியாதல் நடைபெறாது என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு கேனிமீட் துணைக்கோளில் ஆக்சிஜன் அளவை கண்டறியப் ஆய்வு மேற்கொண்ட போது புற ஊதா அலைநீளத்தில் ஆக்சிஜன் அணுக்கள் இல்லாததை உறுதி செய்தனர். இந்நிலையில் தொடர்ந்து நடந்த ஆய்வுகளுக்குப் பிறகு கேனிமீட்டில் சூரிய ஒளிபடும்போது ஆக்சிஜன் மூலக்கூறுகள் ஆவியாவது நாசா விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது.