Categories
உலக செய்திகள்

இவங்க என்ன சாப்பிடலாம்னு சொல்லுங்க…. 7 கோடி வெல்லுங்க… நாசா அசத்தல் அறிவிப்பு…!!!

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையமானது, விண்வெளி வீரர்களுக்கு தகுந்த சாப்பாடு வழங்க ஐடியா தந்தால் 7.4 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.

விண்வெளிக்கு செல்லக்கூடிய வீரர்கள் அங்கு அதிகமான சவால்களை சந்திப்பார்கள். அங்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், உணவுகள் மற்றும் உடைகள் போன்ற எல்லாவற்றிலும் அதிக கட்டுப்பாடுகள் இருக்கிறது. மேலும் அவர்களுக்கென்று சிறப்பாக உணவுகள் தயார் செய்யப்படுகிறது.

கட்டுப்பாடுகள் நிறைந்த, குறைந்த அளவிலான உணவுகளை தான் அவர்கள் உட்கொள்ள முடியும். இந்த உணவு முறையை மாற்றக் கூடிய விதத்தில் புது உணவு வகைகளை கண்டறிந்து தருவோருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்படும் என்று நாசா அறிவித்திருக்கிறது. அதாவது, அந்த உணவு புதுமையாகவும், சத்து நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.

அதே நேரத்தில் அதிக நாட்களுக்கு கெடாமல் இருக்க வேண்டும். இதற்கு சிறப்பான தொழில் நுட்பங்களை கண்டறிந்து கூறும் நபர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று நாசா தெரிவித்திருக்கிறது. முக்கியமாக அந்த உணவு அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும்.

தற்போது பதப்படுத்தப்பட்ட உணவுகளை தான் வீரர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் அதில் அதிக சத்துக்கள் இருப்பதில்லை என்று கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |